Quantcast
Channel: மணிராஜ்
Viewing all 804 articles
Browse latest View live

மகானின் மந்திரப்பிரதிஷ்ட்டை

$
0
0



திருநாகேஸ்வரம்
******************


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்  உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!


திருநாகேஸ்வரம் திருக்கோவில் இராஜகோபுரம் அருகில் ஒரு சிறிய சன்னதி இருக்கிறது.   
அங்கே கணபதி யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிற்து.




இந்த இடம் முற்காலத்தில் அடர்ந்தக்காட்டுப் பகுதியாக இருந்தது.
அங்கே வசித்துவந்த பிரம்மராட்சஸ் ஒன்று அந்தப் பகுதியில் இருந்த மக்களை துன்புறுத்தி வந்தது. யார் கண்களுக்கும் புலப்படாமல் அட்டகாசம் செய்து அச்சுறுத்தி வந்தது.

சதாசிவப் பிரம்மேந்திரர் தரிசனத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் மகானிடம் முறையிட்டனர்.  அவர் அந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.  பிரமமராட்சஸின் சேட்டைகளைத தன் சக்தியால் அறிந்து அடக்கினார்.
மௌன குருவாய், அவதூதராய் விளங்கி, இருநூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து பலரது வாழ்க்கைச் சிறக்கக் காரணமான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்..



மக்களின் நன்மைக்காக இனி எந்த தீய சக்திகளும் அந்த கோவிலைச் சுற்றி நடமாட முடியாதபடி சக்திவாய்ந்த யந்திரப்பிரதிஷ்டை ஒன்றைக் கல்லில் வடித்து கோவிலின் முன் மந்திரப்பலகையில் ஸ்தாபிதம் செய்தார்.

இன்றும் பிரச்சினைகளுடன் வருபவர்கள் யந்திரத்தை வணங்கி முறையிட்டு தங்கள் ஊர் திரும்பியதும், காளைமாட்டுக்கு வாழைப்பழங்களைச் சாப்பிடக்கொடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி பிரச்சினை தீர்வதைக் கண்கூடாகக் காண்பதாகக் கூறுகிறார்கள்.
Sadasiva Brahmendra Jeeva Samadhi 

பல அற்புதங்களை சதாசிவப் பிரம்மேந்திரர் நிகழ்த்தியிருக்கிறார்.  பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
[Image1]
புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர்.

இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரருக்கு மானாமதுரை, கராச்சி, நெரூர் ஆகிய தலங்களில் சமாதி உள்ளது. ஒருவருக்கே மூன்று சமாதிகள் எப்படி? சித்தர்களின் பிரபாவங்களை சாதாரண மக்களால் உணர்ந்து கொள்ள முடியாது


சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், "ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம்' என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார்.

அதில் 45-ஆவது துதி, "சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக' என்பதாகும்.

சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

 திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில்
Thirunageswaram Raghu Temple
திருநாகேஸ்வரம் குளம்



அன்பு மலர்கள்

$
0
0






Posted Image
அழகிய மலர்கள் நம் எண்ணங்களையும் மகிழ்வித்து மலர்விக்கும் .. வாழ்வை வசந்தமாக்கி வாசனை தவழச்செய்யும் ...
மலைப்பிரதேசங்களில் மலர்க்காட்சிகள் நம் மனதைக் கொள்ளை கொள்ளச்செய்யும் ..
பலவகையான தோற்றங்களில் எழில் கோலம் கொண்ட சில காட்சிகள் பகிர்வுக்காக .....
நம்முடைய எண்ணங்களை மலர்கள் வெளிப்படுத்துகின்றன.
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
Posted Image
மலரே என்னென்ன கோலம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
வசந்தம் உன்னோடு சொந்தம்
Posted Image
Posted Image

பூஜைக்கு வந்த மலரோ
 பூமிக்கு வந்த நிலவோ.......
கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே



வைர மணி தேரினிலே கொஞ்சி வரும் மஞ்சள் மலர்




மலர்களை ஏந்திய மக்கள் வெள்ளம்! - ஓஸ்லோ நகரில் ...

 

ஸ்ரீ துளசி பூஜை

$
0
0






 கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என  கொண்டாடப்படுகிறது....அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

பஞ்ச பூதத்தில் அரச மரம் ஆகாயத்தையும்,
 வாதராயண மரம்.  காற்றையும், 
வன்னி மரம் அக்கினியையும், 
நெல்லி மரம். தண்ணீரையும், 
ஆலமரம் மண்ணையும் குறிக்கிறது..


நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம் என்பது ஐதீகம் ..
thu
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பது விஷேஷம் ...

கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. 
Maa Laxmi Glitter Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். 

வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர். 
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.



சங்கடம் தீர்க்கும் சங்கரனுக்கு சங்காபிஷேகம்!

$
0
0


om namah shivay





கழுகுதொழு வேதகிரி சிகரி கரிவீறு கதிருலவு வாசல்                   நிறைவானோர்
கடலொலியதான தமிழ் மறைகள்யோது கதலிவன மேவு               பெருமாளே!
அருணகிரிநாதர் – திருப்புகழ் -திருக்கழுக்குன்றம்


கலங்கி வந்தவர்களுக்கு கலங்காமலே  கழுக்குன்றிலே அருள் காட்டி கலக்கம் தீர்க்க திருக்கழுக்குன்றம் அமர்ந்து  அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கித் தொழுதால் நம் வினைகள் தவிடுபொடியாகும்..

 சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம்வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கும் மலை மேலுள்ள மலைக்கோயிலில் மூலவரின் பின்புறம் ஈசனின் திருமணக் கோலச் சிற்பம் அதி அற்புதமானது ...


 சொக்கநாயகி என்ற திருப்பெயரில் பார்வதி தேவி சொக்கவைத்து அருள்பாலிக்கிறாள்.

மலைக்கோயில் ஈசனை இந்திரன் "இடி வழிபாடு' செய்து வழிபடுகிறான்.  ""இடி வழிபாடு' மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருந்து  நிரூபிக்கிறதாம் ...

வேதகிரீஸ்வரரை வழிபட  மார்கண்டேயர் வந்தபோது அபிஷேகம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வர மார்கண்டேயர் ஈசனை வேண்ட அந்த தீர்த்தக் குளத்தில் வலம்புரி சங்கு தோன்றிய வலம்புரி சங்கால் வேதகிரீஸ்வரரை அபிஷேகித்து வழிபட்டார்.

அன்று முதல் குளமும் சங்கு தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படும் .குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றும் சங்குகள்  "தாழக்கோயில்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்த வசலேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது...

திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 
சங்கு பிறப்பது சிறப்பு.


ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், கார்த்திகை மாத கடைசி திங்களன்று வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது சங்கு தீர்த்தக் குளத்தில் கிடைத்த சங்குகளே முதன்மை பெறும்.
சங்கரனுக்கு நிகழும் சங்காபிஷேகத்தை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் ..!



கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,  சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன்  ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்.இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.

சங்கு அபிஷேகம் காண்டு சங்கடங்கள் நீங்கப் பெற சங்கல்பிப்போம் ....




சின்மயா கணபதி

$
0
0










தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே
திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே
பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே
வெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்”

சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள் "சின்மயா கணபதி" 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது .. 

விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்ட800 மெட்ரிக் டன் நிறையினைக் கொண்ட சிலை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்ட பிரம்மாண்ட சிலை கண்கொள்ளாக் காட்சி ..

10ஆயிரம் சிமென்ட் மூடைகளும், 70டன் இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டது. 

1996ல் துவங்கிய பணி 2001ல் நிறைவு பெற்றது. 

4கி.மீ., தொலைவில் இருந்தே இவரைத் தரிசிக்க முடியும். 

இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்துதலை நாகம் குடைபிடிக்க, அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
'Kumbhabishekam'


Chinmaya Sandeepany  Ashram, Chokkahalli





Garden in Japan

சிவ சிம்மாசனம்

$
0
0






god shiva

கைலாசவாஸா கருணாவிலாஸா,
எந்தனை ஆளும் ஜோதிப்பிரகாசா
சம்போ சங்கர தாண்டவனே சிவ
மஹேஸ்வரனே சிவ மஹாதேவனே கைலாசவாஸா"

 25 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிவ சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், குலதெய்வ குறைபாடுகள், தெய்வக் குற்றங்கள், திருமணத் தடைகள் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம் பிக்கை.இந்த சிம்மாசனத்தில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் எந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.


 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது...
அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி , அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்து, ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளது.. 

ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது..
 நாமக்கல் மாவட்டம் முத்துக்காளிப்பட்டி ஸ்ரீசிவசக்தி பீடத்தில் 
இருக்கும் சிவ சிம்மாசனம்

சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். 

மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளது..

தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிரத்தியங்கராதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளது..

சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும்.


சிவ சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களில் விசேஷ வழிபாடு  செய்யப்பட்டுள்ளது..

ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். 

சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. 

இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. 

இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். 

ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. 

ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.

ருத்ராட்சம் பற்றி இன்னொரு பதிவு ....
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_22.html

ருத்ராட்சத்தேரும் , ருத்ராட்சப்பந்தல்களும் 










"miracle beads".

rudraksha tree





















நிலவும் அமுதும்

$
0
0






 யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
images of goddess saraswati. Goddess
தனம் கல்வி வீரம் தந்திடும் திருமகள் 
தண் கண்கள் கருணையுள்ள மேகம் 

மக்கள் வணங்கும் ஸ்ரீதேவி மகாலட்சுமி
மனது வைத்தால் வர்ஷிக்கும் பொன்மழை
நிலவும் அமுதும் தன்னோடு வந்தன 
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் மகிழ்ச்சியை தந்தன 

வானவர் வணங்கிடும் நீ வேதத்தின் வடிவ
மலர்ந்த முகத்தினளே அடியவரை நோக்குவாய் 
பாற்கடலில் உதித்தவளே வறுமையை போக்குவாய் 
அன்னை ஆனவளே எனை செல்வந்தன் ஆக்குவாய் 
தங்கத் தாமரை மேல் வீற்றிருக்கும் தேவியே 
தாமரை மலர்களை கரத்தில் ஏந்தினாய் 



சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகல வரம் தருவாய் நமஸ்காரம்

பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்


திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக



மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்!



வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்

அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக


ஸர்வே பவந்த ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா:!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்கபாக் பவேத்!!


எல்லாரும் சுகமாக வாழ்க! 
எல்லாரும் நோயின்றி வாழ்க! 
எல்லாருக்கும் மங்களம் உண்டாகுக! 
ஒருவரும் துன்புறாமல் இன்புற்று இருப்பார்களாக! 

மகிழ்ச்சி மலர்விக்கும் மாருதி

$
0
0



hanumanhanuman








""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!

நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய!!
http://www.punjabigraphics.com/images/7/hanuman-ji.jpg
 சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். 

இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். 

பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனிபகவான் .... 


 hanuman.gif

அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. 

காகத்திற்கு வாழை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர்
வழிபாடு  ஏவல், பில்லி சூன்யங்கள் விலக்கும்


ஓம் பராபிசார சமனோ துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ நவத்வார நிகேதனம்

எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றவர் தசரத மகாராஜா.

தசரத மன்னன் சனி பகவானை துதித்துச் செய்த ஸ்தோத்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.


நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே

Hanuman Jayanti Glitters- Click to get more

தழல் வீரம்

$
0
0





‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்..
[PICT0010.JPG]
வெட்டி அடிக்குது மின்னல் - கடல் 
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது 
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று 
விண்ணைக் குடையுது காற்று 

தத்தட திட தத்தட தட்ட ....
தத்தட திட தத்தட தட்ட ....
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம் 


பாட்டுத்திறத்தாலே இவ் வையகத்தை பரிபாலித்திட வந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பா திறமும் பாத்திரப்படைப்பும் வியக்கவைக்கும் திறம் பெற்றவை ...
ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் 
கணபதி ராயன் அவனிரு காலைப்பிடித்திடுவோம் 
குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடுவோம்
 தன்னுடைய மனதில் ஒரு சிறு பொறி போல் இருந்த இறை உணர்வு, மனதின் சகல ஆசா பாசங்களையும் பொசுக்கி விட்டு மனத்தை நிர்மலமாய் வைத்தது என்கிறார்.

பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடன் பாடி நம்க்களிதிருக்கிறார் ..

தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் உயர்ந்த  எண்ண நிலையில்  அளித்த பாடல்கள் சிறப்பு மிக்கவை ...
KARAIKAL TAMIL INAYAM...Enter here

பாரதி பாடிய அற்புதமான தீந்தமிழ்ப் பாடல்கள் கண்களிலும் மனதிலும் கருத்திலும் புத்துணர்வு பூக்கச் செய்யும்...

இசையுடன் இசைந்த பாரதியின் பாடல்கள் காதுகளை வைகுண்ட வாசலாக்கும் ... 


எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!

Waterfall Animated Rocks Scenery


ஸ்ரீமதே நாராயணாய நம:

$
0
0





குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் 
நாராயணா வென்னும் நாமம்.



ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே 
ஸ்ரீமதே நாராயணாய நம:  சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:


  ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திர அடசரங்களான  எட்டெழுத்தும் நாராயண அஷ்டாக்ஷரம் உயரிய மந்திரமாகும் ....

ஹரி நாராயண  ஹரி நாராயண  ஹரி நாராயண  நாராயணா
ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண  ஹரி நாராயண நாராயணா


நாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா


திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா 

உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா


ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே




சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

$
0
0






வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்


மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்



ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் பிரமிட் கவிழ்த்து வைக்கப்பட்டதுபோல் படித்துறைகளும், நடுவில் மண்டபத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் குளத்தின் உள்ளே இரு சிறு குளங்களும் உள்ளது.


ஆண்டாள் நீராடுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி போன்று புண்ணிய தீர்த்தமாக உருவாக்கப்பட்ட திருமுக்குளத்தின் அடிப்பாகத்தில் சுதர்சன ஆழ்வார் உருவம் செதுக்கப்பட்டுள்ள சிலை உள்ளது. 


 சுதர்சன ஆழ்வார் உருவச் சிலை தண்ணீரில் இருப்பதால் சுதர்சன ஆழ்வார் திருமஞ்சனம் செய்த நீருக்கான பெருமை திருமுக்குள தீர்த்தத்திற்குக் கிடைக்கிறது. 

பாவம் நீக்கும் தீர்த்தமாகவும் விளங்குகிறது.

ஆண்டாளுக்கு தினமும் திருமஞ்சனத்திற்கு திருமுக்குளம்  தீர்த்தம் எடுத்து செல்லப்படுகிறது ...

radhe krishna animated
குளத்தின் அருகே நீராட்ட மண்டபத்தில் மார்கழி மாதம் ஆண்டாளுக்கு நீராட்ட உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. 


மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 

புனித  குளத்திற்கு செண்பகதோப்பு பேயனாற்றில் இருந்தும், மொட்டப்பத்தான் கண்மாயில் இருந்தும் தண்ணீர் வருகிறது.
ராமானுஜர் திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுகிறார்..

கல்வெட்டுகளில் ஆண்டாள் கோயில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில்….என்று குறிப்பிட்டுளனர்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி 
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் 
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல்மும்மாறிப் பெய்து 
ஒங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுபடுப்பத் 
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி 
வாங்கக், குடம் நிறைக்கும் வள்ளர்பெரும்பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தேலோரேம்பாவாய்.

பாசுரத்திற்கு விளக்கமாக ஓங்கி உலகளந்த திருக்கோலத்தில் ஆண்டாள் அலங்காரம் ....


கனாக் கண்டேன் தோழி நான் .....

$
0
0









வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் ...

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுத கனாக் கண்டேன் தோழி நான் .........

இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் .....

நால் திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் .........

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் ..............

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் ...

வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் ....

இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் ...

வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் ....

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் ..........

ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே ...


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்..!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய..!!

அரங்கத்து அமுதம் ..

$
0
0








காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச:ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம்மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||

கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருளும் ஸ்ரீரங்கநாதனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் திகழ்கிறாள் ..


மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் இல்லாமல் அரங்கனை அடையாளம் காண இயலாமல் திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.

 தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள். அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன ..

 ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக ஒளிவீசித்திகழ்கிறாள்...

 விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித்தரும் உயர்ந்த தன்மைகளை உடையவள்  பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் . 
 .


Nagai Azhagiyaan 2 Paduka Sahasram Part 33
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! 
தேவலோகத்தில் உள்ள வண்டுகள், தேவர்கள் திருவரங்கனின் திருவடிகளில் பொழிகின்ற மலர்களுடன் இணைந்தபடி திருவரங்கம் வந்து சேர்ந்து விடுகின்றன. 
அவை நறுமணம் வீசும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் எப்போதும் தேன் பெருகும் ஸ்ரீரங்கநாதனின் நாபிக் கமலத்தைக் கூட அடைய முனைவது இல்லை.
Srirangam puja flowers 

















ஸ்ரீராம நாமம்

$
0
0






ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே காமனை ஜெயிக்கும்சொல் மனமே"


ரோம ரோமமு ராம நாமமே...


ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. 

அனுமனது பராக்கிரமம் பொருந்திய  வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று பெயர் பெற்றது .... 

அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அனுமனின் வாலில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. 

அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை நோட்டுப் போட்டு எழுதவே வேண்டாம். 
ஏனெனில், அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்..

ஸ்ரீமன் நாராயணனே தன் மகளுக்கு மாப்பிள்ளையாக வர, வேண்டித் தவமிருந்த  ராஜரிஷி ஜனகனுக்கு அமைந்த அருமையான கோவில்  மதுரை சோழவந்தானில் உள்ள 'ஜனக நாராயணன் கோவில்' ஆகும் ...

ஜனக புத்திரி என்று வால்மீகி சீதா பிராட்டியை கொண்டாடுகிறார் ..

வளம் வர்ஷிக்கும் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி

$
0
0





ரத்ன அங்கி - வெள்ளியாலான மெல்லிய சல்லாத் துணி -
வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் 

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--

- நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று. இந்த பதினொன்றையும் பரம்பொருளாம் திருமாலுடன்  ஒன்றுபடுத்தும் நாளான ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. நாளில் விரதம் இருப்போருக்கு திருமால் பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்புரிகிறார் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களிலேயே மிகவும் போற்றப்படுவது மார்கழி மாதத்தில் வரும் அத்யயன உற்சவம் எனும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகும்.

பகல் பத்து தொடக்கத்தில் சந்தனு மண்டபத்தில் நம் பெருமாள் எழுந்தருள்வார். 

அன்று இரவு சந்தனு மண்டபப் பக்கமாக அரையர்கள் நின்று திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை அபிநயத்துடன் பெருமாள்முன் பாடி, நடிப்பது வழக்கம்.

பகல் பத்தாவது திருநாளன்று நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் -   மோகினி அவதாரம்  கொண்டு காட்சியளிப்பார். 
இராப்பத்து தொடங்குவது வைகுண்ட ஏகாதசியன்று. அன்றுதான் 
பரமபத வாசல் திறக்கப்படும் புனித நாள். 

மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்படும். 

அன்று நம்பெருமாள் விடியற்காலை நாலரை மணியளவில் மூல ஸ்தானத்திலிருந்து ரத்ன அங்கி அணிந்து, அதை வெள்ளியாலான மெல்லிய சல்லாத் துணியால் மூடிக்கொண்டு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.


வைகுண்ட ஏகாதசியன்று முழு நாள் உபவாசம் இருப்பது சிறப்பானது. 

முதல் நாள் தசமியன்று இரவே உணவு உண்ணாமல் இருப்பது வழக்கம். ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று சூரிய உதயத்திற்குமுன் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். 

உணவில்அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அகத்திக்கீரையை "அமிர்தபிந்து' என்பர். 
நெல்லிக்காயில் ஹரி வாசம் செய்வதாகவும், 
சுண்டைக்காயில் தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. இவை உடல்நலத்திற்கு வளம் தருபவை 
 Salagrama on Vaikunta Ekadasi - சாளக்கிரம அபிஷேகம் 

வைகுண்ட ஏகாதசி அரங்கன்   அழகு கொண்டை ,அடுக்குப்பதக்கம் , கஸ்தூரி திலகம் , முத்துமாலை, வைர ஹஸ்தம் , அலங்காரத்தில் அருளும் எழில் காட்சி !





சீனிவாசா .. கோவிந்தா ..

$
0
0




திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள் 
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா 

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யைஊற்றிவைத்தேன் 

என் மனம் உருகிடவே பாடி வந்தேன் 
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன் 


நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா 

உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே



ஆண்டாள் பாடிய தமிழ் வேதமாம் திருப்பாவை பாசுரங்கள்   திருமலையில், சுப்ரபாத சேவைக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் கோவில் அர்ச்சகர்கள், மூலவரின் முன், திருப்பள்ளி எழுச்சி பாடலாக பாடி, ஐதீக முறைப்படி பூஜை செய்கிறார்கள் என்பது  தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது .
 திருமலையில் கோவில் அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, தெப்பக்குளத்தில் நீராடிய பின், நான்கு மாட வீதிகளில், ஆண்டாளின் பாசுரங்களை தமிழில் பாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். 

திருமலையில் மட்டுமல்லாது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும், சீனிவாசமங்காபுரம், அப்பளாய குண்டா, நாராயணவனம், நாகலாபுரம், நகரி, சத்திரவாடாவில் உள்ள பெருமாள் கோவில்களிலும், திருப்பள்ளி எழுச்சி பாடலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும்
திருப்பதி ஏழுமலையானுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ..

$
0
0





பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் 

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்விதிருக் காப்பு. 

 அடியோமோடும் நின்னோடும்    பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 

வடிவாய்நின் வலமார்பினில்       வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு 

வடிவார் சோதிவலத்துறையும்     சுடராழியும் பல்லாண்டு 

படையோர்புக்கு முழங்கும்     அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. 

முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. 
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. 

துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார். 
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக நம்பிக்கை ....
திரேதாயுகத்தில் முரன் என்ற கொடிய அரக்கனை 
பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்து ஆங்காரத்துடன் முரன் அரக்கனை அழித்தாள்.

அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே!
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட 
நீலோற்பவ மலரின விழிமுகத்தாள் நின் நீலவிழிப் பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்  

திருமால் மனம் மகிழ்ந்து சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார். 
திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று.

அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.
தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


கிறிஸ்துமஸ் திருநாள் ...

$
0
0


Jesus Stars Light Green

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!

மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா

கண்ணதாசன்  இயற்றிய இறவாக்காவியம் ஏசு காவியத்தில் ஏசுநாதர் அவதாரம் செய்யும் நிகழ்வை அருமையான தாலாட்டுப் பாடலாய் அலங்கரிக்கிறார் ...

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"

கவியரசு கண்ணதாசன் இயற்றிய 

இயேசு காவியம்இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் அழகாகக் கூறும்  நூல் 
Jesus animated gif
 ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு  செய்து  நம்பிக்கைக்கு அரண் சேர்க்கிறார்..

குளிர்காலம் நீங்குவதை சிறப்பிப்பதோடு  எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்றஎழுச்சியோடும்மகிழ்ச்சியோடும்,
அமர்க்களமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்திருநாள்கிறிஸ்துமஸ்திருநாள்...

கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் 
திருஉருவங்கள் போன்றவற்றால் 
அலங்கரிக்கப்படுகின்றது. 


“ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் ஆல் த வே”

universe glittering stars explosion graphic

வசீகரிக்கும் மீட்பர் கிறிஸ்து சிலை

$
0
0




Christ the Redeemer – High Resolution View of Brazil's Iconic Statue on Corcovado Mountain in Rio de Janeiro

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் 
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்"



என்று போதித்த  சுயநலமற்ற அன்பின் 
சுய உருவம் இயேசு.

நல்ல விதைகள் எப்போதுமே 
பயன் தராமல் போவதில்லை


நிரந்தர மீட்பைத் 
மக்களுக்குத் தரவே 

மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

மண்ணில் விழுந்து 
மனதில் முளைக்கும் விதை.


கேட்கச் செவியுள்ளவன் 
கேட்கட்டும்.


புதிய உலக அதிசயமாகக்கொண்டாடப்படும் பிரம்மாண்டமான இயேசு சிலை பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ளது..

வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் உயரம் 130 அடி...இயேசு சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.

வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் 1931ம் ஆண்டு கட்டப்பட்டது.. 

எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !

சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. 


பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்க எண்ணிய சிந்தனையே விதையாக அமைந்தது ..

ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் இயேசுவின் சிலை ஒன்றை கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் நிறுவும் கனவு நனவானது ...

சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை கான்கிரீட் கொண்டு  கட்டி சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மாணிக்கப்பட்டு பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி  கை வண்னத்தில் எழிலாக உருவாக்கம் கொண்டது ...
சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டு பணி நிறைவுற்றது.
1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது ...
அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் எஸ்கலேட்டர்  வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.

பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது  இயேசு சிலை



Christ the Redeemer was struck by lightning. 



திருவாதிரைத் திருநாள்

$
0
0
Click image for larger version.   Name: Shiva_dances.gif  Views: 4  Size: 3.9 KB  ID: 81131





ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று 

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான். 
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான்  செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..

ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் 
அருள்பாலிப்பார். 
ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..

கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். 

அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.  

தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும். 

பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.

திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.   

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம்  அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது. 

"ஆடல்வல்லான்' என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.

திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..

ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே  தாத்பர்யம்

திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. 

எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. 

திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழிஎன்பது பழமொழி  மூலம்  பிரசாதத்தின் மகிமை விளங்கும். 
களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

கோவை பேருரில்  எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம். 

சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.

சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 

என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து  நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!


Viewing all 804 articles
Browse latest View live